"பூனைக்குட்டி வெளியே வந்தது" - ஓபிஎஸ் - ஸ்டாலின் மருமகன் சந்திப்பு குறித்து ஜெயகுமார் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையேயான பரபரப்பான ஆட்டம் நடைபெற்றது. மும்பை அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டத்தை காண திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்களும் இந்த ஆட்டத்தை கண்டு ரசித்தனர். குறிப்பாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வமும் இன்றைய ஆட்டத்தை மைதானத்திற்கு நேரடியாக வந்து கண்டுகளித்தார்.

அப்போது ஓபிஎஸ், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரிசனை நேரில் சந்தித்து பேசி இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே திமுகவின் பி-டீமாக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பை கடுமையாக விமர்சித்து அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பூனைக்குட்டி வெளியே வந்தது" என்று இந்த சந்திப்பு குறித்து விமர்சனம் செய்துள்ளார். 

ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு குறித்து மேலும் சிலரின் பதிவுகள் பின்வருமாறு :

திமுக அவைத்தலைவர்….

இப்ப மட்டும் இல்ல எப்பயுமே சொல்லுவேன் ஓபிஎஸ் தான் திமுகவின் B-Team

நம் தமிழ் வீரர்களை பீரங்கி முனையில் மிரட்டினர் அதற்கும் அஞ்ச வில்லை.. புளிய மரத்தில் தூக்கிட்டனர் அதற்கும் அஞ்சியதில்லை..கப்பலோட்டியத்திற்கு கடுந்தண்டனை கொடுத்தனர் அதையும் தாங்கினான் தமிழன்.இந்த ஓபிஎஸ் தமிழ் மரபா இல்லை கெடும் எண்ணம் கொண்ட மந்திரவாதியா 😖

நேற்று ஓபிஎஸ் அதிமுகவுக்கு தூது விடவில்லை என கூறினார்.

ஆம், திமுகவிற்கே நேரடியாக தூது விட்டு உள்ளார் என்பது புரிகிறது

புரட்சித் தலைவரும் புரட்சித்தலைவி அம்மாவும் எதிர் துன்ன ஒரே கட்சி திமுகவை தான் இன்றுவரை எங்களுக்கு எதிரியாக இருக்கும் திமுக மட்டும்தான் அதைக் கூட பொய் கொஞ்சிக் குழாயில் இருக்கும் இந்த கேடுகெட்ட ஓபிஎஸ் பாருங்கள்

ஓபிஎஸ் சாயம் வெளுத்து போச்சு....

இன்றைய சபரீசன் - ஓபிஎஸ் சந்திப்பில் திமுகவிற்கு நன்மையுமில்லை, தீமையுமில்லை. பழனிசாமி & கோவிற்கு மிக பெரும் நன்மை - ஓபிஎஸ் திமுக ஆதரவாளர் என்று நிறுவ. ஓபிஎஸ்ஸை அதி தீவிர அதிமுகவினர் எதிர்க்க துவங்குவர். பெரும் நன்மை- சரக்கு சங்கர் போன்ற தரகர்களுக்கு தான்
பெரும் நன்மை, பொய் பரப்ப!




இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL2O23 CSKvsMI OPS Sabs Meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->