BSP ஆம்ஸ்ட்ராங் கொலை முன்கூட்டியே திட்டமிடப் பட்டதா..?! - வெளியான திடுக்கிடும் தகவல்..!! - Seithipunal
Seithipunal



பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சில மர்ம நபர்களால் அவரது வீட்டிற்கருகில் படுகொலை செய்யப் பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப் பட்டது என்று தெரிய வந்துள்ளது. 

முன்னதாக BSP தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது உயிருக்கு சிலரால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் பெற்றுள்ளார். சுமார் 9ல் இருந்து 20 லட்சம் வரை பெறுமானமுள்ள துப்பாக்கியை இத்தாலியில் இருந்து வாங்கி வந்துள்ளார். இதையடுத்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது துப்பாக்கியை சென்னை போலீசிடம் ஒப்படைத்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூன் 13ம் தேதி தான் துப்பாக்கியை போலீசிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளார். Beretta Tom cat type 3032 வகையைச் சேர்ந்த இந்த துப்பாக்கி ஒரே நேரத்தில் 9 ரவுண்டுகள் வரை சுடும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கி வைத்திருப்பதற்கான ஆல் இந்தியா லைசென்ஸ் பெற்று, எங்கு சென்றாலும் தன்னுடனேயே துப்பாக்கியை கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் எப்போதெல்லாம் துப்பாக்கி வைத்திருப்பார் என்று கொலையாளிகள் நீண்ட நாட்களாக அவரது வீட்டிற்கு அருகிலுள்ள பிரியாணி கடையில் நின்று நோட்டம் விட்டுள்ளதாக தெரிகிறது. 

இதையடுத்து சம்பவத்தின் போது ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் வெளியே நின்று போனில் பேசிக் கொண்டிருந்த போது, அவரிடம் துப்பாக்கி இல்லை என்று தகவல் கிடைத்ததையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is BSP Leader Armstrong Murder PrePlanned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->