ஏழைகளின் குடிசை வீடுகள் தான் ஆக்கிரமிப்பா?...மண்ணின் மக்களை விரட்டியடிப்பது தான் விடியல் அரசா? - சீமான் சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 575 குடும்பங்களின் குடியிருப்புகளைக் கண்மாய் இருந்த பகுதி என்று கூறி மக்களை வெளியேற்றி வீடுகளை இடிக்க தமிழ்நாடு அரசு அறிவிக்கை அனுப்பியிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

மதுரை முல்லை நகர் பகுதியில் இரண்டு தலைமுறைகளாக மக்கள் வாழும் இடம் கண்மாய் இருந்த பகுதி என்றால், மக்கள் அங்குக் குடியேறி வாழத் தொடங்கியவுடனேயே அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இருக்கலாமே? குடியிருப்புகள் அமைக்க அவர்களுக்குத் தடைவிதித்திருக்கலாமே? மாறாக தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்ட 160 மனைகளை வழங்கியது எப்படி?

மதுரை மாநகரில் வென்ற திமுக கூட்டணியைச் சார்ந்த தற்போதைய சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாநகரத் தந்தை ஆகியோர் தேர்தலில் நின்றபோது ஆக்கிரமிப்பாகத் தெரியாத வீடுகள், மக்களை ஏமாற்றி வென்றபிறகு ஆக்கிரமிப்பாகத் தெரிவது எப்படி?

ஆக்கிரமிப்பென்றால், ஏழைகளின் குடிசை வீடுகளும், எளிய மக்களின் கூரை வீடுகளும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு நினைவுக்கு வருவதேன்? ஏன் அவைகள் மட்டும் கண்ணை உறுத்துகிறது?

மண்ணின் மக்களை அவர்களது நிலத்தைவிட்டே திமுக அரசு விரட்டியடிப்பதற்குப் பெயர்தான் விடியல் அரசா? அடித்தட்டு உழைக்கும் மக்கள் அரும்பாடுபட்டு உழைத்து, சிறுகச் சிறுக சேர்த்தப் பணத்தில் தங்கள் வாழ்நாள் கனவாக எண்ணிக் கட்டிய வீட்டை இடித்து, அவர்களைக் காவல்துறையைக் கொண்டு அப்புறப்படுத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

மதுரை முல்லைநகர் மக்களின் குடியிருப்புகளை இடித்து அவர்களை வாழ்விடத்தை விட்டே வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is it the occupation of the slums of the poor is it the dawn kingdom that drives away the people of the land seeman barrage of questions


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->