சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய அண்ணாமலை தன்னையே அடித்துக் கொள்வதா..?கஸ்தூரி வேதனை..! - Seithipunal
Seithipunal


பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து நடிகை கஸ்தூரி வேதனை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வெளிநபரால் பல்கலைக்கழக வளாகத்திலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்காக ஆளும் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்த சென்றபோது தடுத்து கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில், திமுகவை கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னை தானே அடித்து கொண்டார்.

மக்களுக்கு  விரோதமாக செயல்படும் திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை கூறியிருந்தார். அத்துடன், தன்னை தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ள போவதாகவும் கூறியிருந்தார். 

இன்று காலை அவ்வாறே தன் வீட்டு வளாகத்தில் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். 

இந்த போராட்டம் குறித்து பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி “என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. சமூகவிரோதிகளை அடிச்சு தூக்க வேண்டிய தலைவன் தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்ளுவதை பார்க்க முடியவில்லை. அண்ணாமலையின் வழி அனைவரின் வலியானால், தமிழகம் அரசீற்றம் கொண்டால், மாற்றம் வரும். வரவேண்டும்” எனக் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the leader who should wash away anti social elements beating himself


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->