09 ஆயிரம் பேரை வேலையை விட்டு தூக்கியுள்ள பிரபல மென்பொருள் நிறுவனம்..! - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி நிறுவனமான   ஐ.பி.எம்., அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அர்மாங்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு மென்பொருள் மற்றும் கணினி சார்ந்த நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐ.பி.எம்., நிறுவனமும் அமெரிக்காவில் 09 ஆயிரம் பேரை பணியில் இருந்து விடுவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கலிபோர்னியா, டெக்சாஸ், டல்லாஸ், நியூயார்க் நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றியோர் இவ்வாறு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில்,  'கன்சல்டிங், கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி, கிளவுட் உள்கட்டமைப்பு, விற்பனை மற்றும் ஐடி அமைப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IBM to lay off 9000 people


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->