ஓபிஎஸ்-யை தொடர்ந்து இபிஎஸ்-க்கு கொடுத்த அதிர்ச்சி! அடுத்தடுத்து ரெய்டு.. அதிரும் அதிமுக வட்டாரம்!
IT Raid in EPS Side
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக கருதப்படும் நபரின் உறவினர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக சேலம் புறநகர மாவட்ட செயலாளர் இளங்கோவன், எடப்பாடி பழனியசாமிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியன் மற்றும் மகன் பிரவீன் குமார் ஆகியோரின் வீடு, கல்லூரி உள்ளிட்ட 10 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இளங்கோவனின் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில் இன்று அவரின் உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து செயல்பட முடிவு எடுத்ததாக தகவல் வெளியான நிலையில் அவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் செயல் அல்லது அவருக்கு நெருக்கடியை கொடுக்கும் செயல் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.