திருவள்ளூருக்கு குறி... உறுதியான நிற்கும் ஜெகன் மூர்த்தி.!! மௌனம் காக்கும் அதிமுக.!! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் இடம்பெறும் என அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார். 

மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடும் எனும் தெரிவித்துள்ள அவர் தமிழக மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் திருவள்ளூர் காஞ்சிபுரம் விழுப்புரம் ஆகிய மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி ஒதுக்குமாறு கேட்டுள்ளோம் என தெரிவித்துள்ள ஜெகன் மூர்த்தி திருவள்ளூர் சொந்த தொகுதி என்பதால் அதனையே ஒதுக்குமாறு அழுத்தமாக தெரிவித்துள்ளோம் கூறியுள்ளார். 

இன்னும் அதிமுக பேச்சுவார்த்தை தொடங்கவில்லை அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ள ஜெகன் மூர்த்தி திருவள்ளூர் தொகுதியை அதிமுகவிடம் கேட்டு பெறுவோம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jagan moorthy Puratchi bhartham alliance with AIADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->