முன்னாள் அதிமுக அமைச்சருக்கு சிறை தண்டனை?...நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
Jail sentence for former aiadmk minister court ordered to appear in person
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி, கே.சி.வீரமணி தனது சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை அளித்திருப்பதாகவும், அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலதிபர் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கின் அடிப்படையில் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாணப் பத்திரத்தில் சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு விசாரணைக்காக வரும் 26-ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக வேண்டும் என்று திருப்பத்தூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Jail sentence for former aiadmk minister court ordered to appear in person