சாராய வியாபாரிக்கும் கேக் ஊட்டும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு? - மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் தற்பொழுது வரை பலியான நிலையில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி இருபதாவது வார்டு திமுக கவுன்சிலரின் கணவரும் பிரபல சாராய வியாபாரியுமான மருவூர் ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மருவூர் ராஜாவுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் மஸ்தான் "குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஏற்கனவே தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார். அப்பொழுது மருவூர் ராஜாவுடன் எடுத்த புகைப்படம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் "என்னுடன் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். எதார்த்தமாக வருவார்கள். என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். 

நான் பொதுவாழ்வில் இருக்கிறேன். அண்ணா இன்று எனக்கு பிறந்தநாள் என்று ஒருவர் வருவார் அண்ணா எனக்கு திருமணம் நாள் என மற்றொருவர் வருவார் அவர்களின் நாங்கள் வாழ்த்துவோம். புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அதுபோன்ற புகைப்படங்கள் தானே தவிர வேறு எதுவும் இல்லை" என விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் அதிமுக தரப்பில் இருந்து திமுக அமைச்சர்கள் மீது கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா.? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "சாராய வியாபாரிக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு? ஊரை அழிப்பவனுக்கு கேக் ஊட்டுவது தான் அமைச்சரின் பணியா? அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?" என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar ask about relationship between liquor dealer and dmk minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->