ஜெயக்குமார் ஜாமின் மனு, அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு முயற்சி செய்ததாக நரேஷ் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அவதை கைது சிறையில் அடைத்துள்ளது.

இந்த வழக்கில் ஜாமின் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனுக்களை கீழமை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனுவை ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், புகார் அளித்த நரேஷ்குமார் தற்போது நல்ல நிலையில் உள்ளார் என்றும், அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே, என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தது தவறானது என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், நரேஷ்குமாரின் மருத்துவ அறிக்கையைிலும் அவருக்கு காயங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது என்றும், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது, எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு தொடர்பாக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டுமென முறையீடு செய்தனர். 

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் நாளை விசாரணைக்கு வர உள்ள வழக்குகள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டு விட்டதால் இந்த கோரிக்கையை தற்போது ஏற்க முடியாது என்று கூறி, ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar bail case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->