மஹிந்திரா XUV 3XO EV – டாடா பஞ்ச் EV-க்கு போட்டியா வரும் மஹிந்திரா XUV 3XO எலக்ட்ரிக் வருது.. அம்சங்கள் எல்லாமே தெறிக்குது!
Mahindra XUV 3XO EV Tata Punch EV competitor Mahindra XUV 3XO Electric is coming Features are all splashing
மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான எஸ்யூவி மாடல் XUV 3XO இன் எலக்ட்ரிக் பதிப்பை விரைவில் இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்த புதிய மாடல் டாடா பஞ்ச் இவி, சிட்ரோன் eC3, எம்ஜி விண்ட்சர் இவி போன்ற கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.
டிசைன் மற்றும் வெளிப்புற அம்சங்கள்
மஹிந்திரா XUV 3XO இவியின் வெளிப்புற அமைப்பில் அதன் ஐசிஇ மாடலை ஒத்த அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் மூடிய டைப் கிரில், முன்னணி சார்ஜிங் போர்ட், சிறிய மாற்றங்களுடன் ஏரோடினமிக் அலாய் வீல்கள் மற்றும் புதிய LED லைட்டிங் அம்சங்கள் இடம்பெறும்.
உள்தள வசதிகள்
இந்த புதிய மாடலில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், டூயல்-சோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் காணப்படலாம்.
பேட்டரி மற்றும் ரேஞ்ச்
மஹிந்திரா XUV 3XO இவியில் 34.5 kWh பேட்டரி பேக் வழங்கப்படலாம். இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் சுமார் 400 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாகனத்தில் முன்னணி பாதுகாப்பு அம்சங்களாக லெவல் 2 ஏடிஏஎஸ், பிளைண்ட் வியூ மானிட்டர், ஃபிரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ ஹோல்ட் உடைய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பனோராமிக் சன்ரூஃப் போன்றவை இடம்பெறலாம்.
விலை மற்றும் வெளியீடு
மஹிந்திரா XUV 3XO இவியின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், இது 2025 முதல் பாதியில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன. இதன் ஆரம்ப விலை சுமார் ₹12-₹15 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மாடல் இந்திய வாகன சந்தையில் மஹிந்திராவின் நிலையை இன்னும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. டாடா பஞ்ச் இவிக்கு இது ஒரு புதிய சவாலாக அமையும்.
English Summary
Mahindra XUV 3XO EV Tata Punch EV competitor Mahindra XUV 3XO Electric is coming Features are all splashing