அதிமுகவை ஒழிக்க போறாரா.? எத்தனை கருணாநிதி வந்தாலும் முடியாது.!! உதயநிதியை பந்தாடிய ஜெயக்குமார்.!!
Jayakumar response to udhayanithi comments on AIADMK
தஞ்சாவூர் மாவட்ட திமுக இளைஞர் அணியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் "அதிமுக எனும் கட்சியை ஒழித்தால்தான் ஒன்றிய பாஜகவையும் சேர்த்து நம்மால் ஒழிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு 2021 தேர்தலில் அடிமைகளை துரத்தி அடித்து விரட்டியது போல 2024ல் அடிமைகளின் எஜமானர்களையும் சேர்த்து விரட்டுவோம்" என பேசி இருந்தார்.
இந்த நிலையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் அதிமுகவை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் "உதயநிதி குட்டி என்ன தப்பு பண்ணாலும் அப்பன் ஸ்டாலின் தண்டிக்க மாட்டார்.
அண்ணா திமுகவை உதயநிதி ஒழிக்கிறாரா? அவங்க அப்பனாலயே முடியல, அவங்க அப்பனை பெத்த அப்பனாளையும் முடியல, அப்பன் தாத்தா இவர்களால் முடியாததை நேத்து வந்த அரசியல் கத்துக்குட்டி ஒழித்து விடுவேன் என சொல்கிறது.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சரி, எத்தனை கருணாநிதிகள் வந்தாலும் சரி, எத்தனை ஸ்டாலின் வந்தாலும் சரி அண்ணா திமுகவை எந்த காலத்திலும் அடிக்க முடியாது. உலகம் உள்ளவரை அண்ணா திமுக இருக்கும். அந்த வகையில் தான் அண்ணா திமுகவின் எழுச்சி இருக்கிறது.
கருணாநிதி அந்த காலத்தில் எவ்வளவு முயற்சி செய்தார், ஆனால் முடியவில்லை. திரு ஸ்டாலின் இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறார், ஒருபோதும் முடியவில்லை. எம்ஜிஆர் அவர்கள் 13 ஆண்டுகள் திமுகவை வனவாசம் அனுப்பி வைத்தார். ஜெயலலிதா அவர்கள் 10 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்தார்" என காட்டமாக பதிலடி அளித்துள்ளார்.
English Summary
Jayakumar response to udhayanithi comments on AIADMK