#BigBreaking | ஜெ, மரணம் : அதிமுக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 4 பேருக்கு ஆப்பு - தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணைய அரிக்கயில், வி கே சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட நான்கு பேர் குற்றவாளிகளாக கருதி, அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி, அதிமுகவினர் மற்றும் தமிழக மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நான்கு பேரு மீது விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை படி முக்கிய குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ள விகே சசிகலா, மருத்துவர் கே எஸ் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த எட்டு பேர் மீதும் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayalalitha death case TNGovt Order 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->