ஆந்திராவில் வெடித்த வன்முறை - கொந்தளித்த ஜெகன் மோகன் - தெலுங்கு தேசம் மீது குற்றச்சாட்டு!
Jegan Mohan reddy Accused Telugu Desam Party
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் 4 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலமும் அடங்கும். ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வென்றது.
மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 21 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வென்றுள்ளன. ஆனால் தற்போதைய முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகவும், பவன் கல்யாண் ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில், "தெலுங்கு தேசம் கட்சி இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.
ஆனால் அதற்கு முன்பே அக்கட்சியினர் இங்கு வன்முறையில் ஈடுபடுகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியாரின் சொத்துக்களை சூறையாடி வருகின்றனர். இங்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. உடனடியாக ஆளுனர் தலையிட்டு தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறையைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Jegan Mohan reddy Accused Telugu Desam Party