"ஜெய்பீம் படத்துக்கு ஆஸ்கர் விருதா? சூர்யா கும்பலின் மாபெரும் பித்தலாட்டம்."
JEI BHIM OSCAR ISSUE
ஜெய்பீமுக்கு ஆஸ்கர் விருது; ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் 'ஜெய்பீம்'; சூர்யா, சந்துருவுக்கு 'சமுதாய ஆஸ்கர்' - இப்படி படோபடமான செய்திகள் நாள்தோரும் ஊடகங்களை கலக்குகின்றன.
ஆனால், இவை எல்லாமே மாபெரும் பித்தலாட்டக் கதைகளே ஆகும். அந்தக் கட்டுக்கதைகளின் பின்னணியை கீழே காண்க:
1. "ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் 'ஜெய்பீம்"
ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் 'ஜெய்பீம்' படத்தை ஆஸ்கர் குழுவினரே வெளியிட்டுள்ளனர். அந்த அளவுக்கு உன்னதமான காட்சிகள் படத்தில் உள்ளன என்கிற புரூடா ஒன்று உலாவிடப்பட்டுள்ளது. இது ஒரு உலகமகா கட்டுக்கதை ஆகும்.
ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் 'ஜெய்பீம்' படம் தானாக பதிவேறவில்லை. 3 லட்சத்து 70 ரூபாய் பணம் கொடுத்து வெளியிட்டுள்ளர்கள். இந்த செய்தியை ஆஸ்கர் நிறுவனமே தெளிவாக '5000 அமெரிக்க டாலர் கொடுத்து' இந்த வசதியை வாங்கிக்கொள்ளலாம்' என்று குறிப்பிட்டுள்ளது. (Streaming uploads for Scene at the Academy may be purchased. Submission fee is $5,000)
இவ்வாறாக பணம் கொடுத்து ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் 'ஜெய்பீம்' படத்தை வெளியிட்டுவிட்டு, ஏதோ அக்காடமி விருது குழுவினரே தேர்ந்தெடுத்து வெளியிட்டது போன்று புரூடா விடுகின்றனர்.
2. "ஆஸ்கர் பட்டியலில் 'ஜெய்பீம்': உண்மை என்ன?"
ஆஸ்கர் விருதுக்கான பொதுப் பட்டியல் என்பது, விருதுக் குழுவினர் தேர்வு செய்யும் படங்களின் பட்டியல் அல்ல. அது விருது கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் அனைத்து படங்களின் பட்டியல் ஆகும்.
'ஒரு திரைப்படம் என்பது 40 நிமிடங்களுக்கு மேலாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு பிக்ஸல் மற்றும் ஒலித்தரம் இருக்க வேண்டும்' என்றெல்லாம் ஆஸ்கர் குழுவுக்கான விதிகளை வைத்துள்ளனர். இந்த குறைந்தபட்ச தகுதியுடன் விண்ணப்பிக்கும் அனைத்து படங்களையும் "நினைவூட்டல் பட்டியல்" (Reminder List) என்று வெளியிடுகிறார்கள்.
இவ்வாறு 2022 ஆம் ஆண்டுக்கான 276 படங்களின் 'நினைவூட்டல் பட்டியல்' வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து மரைக்காயர், ஜெய்பீம் படங்கள் இடம்பெற்றுள்ளன. (இதே போன்று கடந்த ஆண்டும் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை இடம்பெறச் செய்தனர்.)
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் - 'நினைவூட்டல் பட்டியல்' என்பது விருது பட்டியலும் அல்ல. தேர்வு பட்டியலும் அல்ல. விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பம் பெறப்பட்ட படங்களின் பட்டியல் மட்டுமே.
இவ்வாறு, ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு, 'ஆஸ்கர் விருதுக்கு ஜெய்பீம் தேர்வு' என்று புரூடாவை கிளப்பி விட்டுள்ளனர்.
(உண்மையில், இந்தியாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் வெளிநாட்டு படங்கள் பட்டியலுக்கு அனுப்பப்பட்ட படம் கூழாங்கல் எனும் தமிழ்ப்படம் ஆகும். அது விருதுக்கு தேர்வாகவில்லை.)
3. சூர்யா, சந்துருவுக்கு 'சமுதாய ஆஸ்கர்'
இது ஒரு உலகமகா பிராடு விருது. அமெரிக்காவில் உள்ள வெளிநாடு வாழ் பாஜக (NRI-BJP) பிரதிநிதியான விஜய் பிரபாகர் என்பவர் கொடுக்கும் 'டுபாக்கூர்' விருது ஆகும். 2004 ஆம் ஆண்டிலேயே ஜெயலலிதாவுக்கு 'தங்கத்தாரகை' எனும் 'டுபாக்கூர்' விருதை கொடுத்து ஏமாற்றியவர் தான் இந்த விஜய் பிரபாகர்.
இதே 'சமுதாய ஆஸ்கர்' விருதை தமிழிசை, ஓபிஎஸ் ஆகியோருக்கும் இவர் கொடுத்துள்ளார் (இதுகுறித்து விரிவாக எனது முகநூல் பதிவில் காணலாம் 21.01.22)
"சூர்யா கும்பலின் மாபெரும் பித்தலாட்டம்"
1. வேலைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், நேர்காணலுக்கான அழைப்பையே - வேலை கிடைத்துவிட்டதாக புரூடா விட்டால் எப்படி இருக்கும்? (ஜெய்பீமுக்கு ஆஸ்கர் எனும் புரூடா)
2. ஒரு பத்திரிகையில் காசு கொடுத்து விளம்பரம் செய்துவிட்டு - அதையே பத்திரிகையில் வெளிவந்த செய்தி என்றால் எப்படி இருக்கும்? (ஆஸ்கர் யூடியூப் சேனலில் ஜெய்பீம்- fee $5,000)
3. ஒரு உண்மையான கார் வாங்கிக் கேட்கும் மகனுக்கு, பொம்மைக் கடையில் பொம்மை கார் வாங்கிக் கொடுத்தால் எப்படி இருக்கும் (சமுதாய ஆஸ்கர்)
இப்படி ஒரே ஒரு படத்துக்காக விதம் விதமான கட்டுக்கதைகளை அள்ளி விடுகிறது சூர்யா கும்பல். இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் 'ஆகா, ஓகோ' என்று புகழ்ந்து தள்ளுகின்றன தமிழக ஊடகங்கள்.
இவையெல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்ட செயல்களே அன்றி வேறில்லை.
மேல்குறிப்பிட்ட செய்தி பாமகவை சேர்ந்த அருள் ரத்தினம் தனது முகநூலில் பதிவிட்ட பதிவாகும்.