ஜெய்பீம் விவகாரம் : காவல்துறைக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிபதி.!
JEI BHIM V VANNIYAR DEC
நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ், வடநாட்டு சேட்டு ஒருவர் ஹிந்தி மொழியில் பேசும் போதே பட்டென்று கன்னத்தில் அறைந்து தமிழில் பேசவேண்டும் என்று சொல்வர். இது வட இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதேபோல், இந்த படத்தில் பழங்குடியின மக்களான ஒட்டர் சமூக மக்களை அசிங்கப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக, ஒட்டர் சமூக மக்கள் போர்க்கொடி தூக்கினர்.
தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமூகத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக, சாதிய வன்மத்துடன், இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில், இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதற்கு, அந்த சமூக மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த படத்தில் சாதிய வன்மத்துடன் அமைக்கப்பட்ட அந்த காட்சியை நீக்கி, செய்த தவறை ஒப்புக்கொண்டனர். மேலும் படத்தின் இயக்குனர் இதற்காக மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தாக்கல் செய்த வழக்கில், ஒரு மாதத்திற்குள் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிதம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.