சந்தி சிரிக்கிறது.., அனைத்திலும் தோற்றுப்போன திமுக அரசு - ஜெயக்குமார் காட்டமான விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் தமிழக அரசையும், தமிழக போக்குவரத்து துறையையும் கண்டித்து இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், போராட்டத்தில் பேசியதாவது,

"போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்றி தர வேண்டும். தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியின் அவல நிலையை போக்குவரத்து தொழிலாளர்களாக உள்ள அதிமுக தொண்டர்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் நிலைமை என்ன ஆகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு தினமும் 'போட்டோ ஷூட்' மட்டும் தான் முக்கியமான பணியாக இருந்து வருகிறது.

அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போதைய திமுக திறந்து வைத்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியாக சொன்ன நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை, கியாஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ.100 கொடுக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்தார்களா? 

அனைத்திலும் தோல்வியடைந்த இந்த அரசு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்க கூடாது. தொழிலாளர்கள் நினைத்தால் இந்த ஆட்சிக்கே முடிவு கட்டி விடுவார்கள்" என்று ஜெயக்குமார் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JEYAKUMAR SAY ABOUT DMK GOVT AUG


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->