பாஜக தலைவர் நட்டா தான் ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் - கொந்தளித்த ஜோதிமணி! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தலில், கார்கே பெரும்பான்மையான வாக்குகளை பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ரப்பர் ஸ்டாம்ப் தலைவராகத்தான் செயல்படுவர் என்று பாஜக தரப்பில் விமர்சனம் வைக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளித்துள்ள பதிலடியை, "தேர்தலை மிக நேர்மையாக நடத்தியதாக சசி தரூரே பாராட்டினார். கார்கே, நேரு- காந்தி குடும்பத்தின் ரப்பர் ஸ்டாம்பாக செயல்படுவார்  என்ற கருத்து தவறானது.

ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக மத்திய அரசே செயல்படுகிறது. மோடி, அமித்ஷா  கைப்பாவையாக, ரப்பர் ஸ்டாம்பாக நட்டா செயல்படுகிறார்.

எனவே அது குறித்து பாஜக பேச முடியாது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. ஜனநாயக முறைப்படி கட்சி தலைவர் தேர்தலை காங்கிரஸ் நடத்தி உள்ளது." என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவிக்கையில், "சமூகத்தின் கீழ் நிலையில் இருந்து கடின உழைப்பால் உயர்ந்தவர் கார்கே. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைராக தேர்ந்தெடுத்திருப்பது காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக முறையை காட்டுகிறது.

கார்கே, சோனியா - ராகுலின் ரப்பர் ஸ்டாம்ப்-ஆக செயல்படுவார் என்பது பாஜக தலைவர்களின் ஆணவமான பேச்சு. தேர்தலையே நடத்தாக ஒரு கட்சி பாஜக. அவர்கள் காங், குறித்து பேச முடியாது" என்று, கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jothimani say about BJP Head issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->