அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சி மிக மோசம் - என்ன இவரே இப்படி சொல்லிட்டாரு?! கொந்தளிக்கும் திமுகவினர்! - Seithipunal
Seithipunal


சமூகவலைத்தளங்களில் திமுக மற்றும் திமுக அரசுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிப்பதுடன், திமுகவை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தால் அதற்க்கு புள்ளி விவரங்களுடன் பதில் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் பிரபல பத்திரிகையாளர் நெல்சன் சேவியர், முதல் முறையாக திமுக அரசின் மீது ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்த அவரின் சமூகவலைத்தள பதிவின் விவரம் பின்வருமாறு:

அதிமுக ஆட்சிக் காலம் தமிழக சுகாதார துறைக்கு இருண்ட காலம் என அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தார். திமுக அரசு சுகாதாரத் துறையினை தற்போது வழி நடத்தும் விதம் அதைவிட மோசம் என்பது போல் உள்ளது. அவ்வளவு மோசம்.

அதிமுக ஆட்சி காலத்தில் நிரந்தர பணியில்  நியமிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 12,979  (2013-2018)

திமுக அரசில் கடந்த நான்கு வருடங்களில் மொத்தம் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் 1752.

2022ம் வருடத்தில் அறிவிக்கப்பட்ட மொத்த பணியிடங்களில் 1021 பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை.

2024ம் வருடம் மார்ச்  மாதத்தில் 2550 மருத்துவர்கள் புதிதாக பணியில் சேர்க்க MRB அமைப்பு  அறிவிப்பை வெளியிட்டது. அது குறித்து பின்பு எந்த தகவலும் இல்லை. 2024-ம் வருடமும் முடியப் போகிறது.

தமிழக சுகாதார துறையோ பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால் அவர்களை மட்டுமே நம்பி இயங்குகிறது. அவர்களையே அதிகம் சுரண்டுகிறது. உண்மையான விடியல் தமிழக சுகாதார துறைக்கு எப்பொழுது  வரும் ?

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு நாட்டிலேயே சிறந்து விளங்க அரசு மருத்துவர்களே அதன் முதுகெலும்பு. 

பொது சுகாதாரத் துறையை மேம்படுத்தாமல் இருப்பது மக்கள் நலனைக் கை கழுவுவதற்கு சமம்" என்று தெரிவித்துள்ளார். 

இவரின் இந்த பதிவில் திமுகவினர் பலரும் கடுமையான கண்டனங்களையும், இது திமுக அரசு மீதான அவதூறு என்றும் பதில் கொடுத்து வருகின்றனர்.

அதே சமயத்தில் எப்போதும் இல்லாமல் திடீரென திமுக அரசை விமர்சனம் செய்துள்ள நெல்சன் செவியரை, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், என்ன மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு வெளிய பேசிட்டு இருக்காறா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Journalist Nelson Xavier say about ADMK and DMK Govt Hospitals


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->