எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.1 கோடி: தனபாலுக்கு உத்தரவிட்ட சென்னை  உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


கொடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்ததுடன், எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு வழங்கவும் தனபாலுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

அதில், எடப்பாடி பழனிசாமிக்கு தொர்பு இருப்பது போல் தனபால் பேசி இருந்தார். இதனை சுட்டிக்காட்டி அப்போது எதிர்ச்சியாக இருந்த திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்த கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி டீக்காரமன், எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச நிரந்தர தடை விதித்துடன், ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High Court Kodanad Case ADMK EPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->