மிக மோசம்! 5-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம்! மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 6 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளில் 91% பேர் பள்ளிகளில் சேர்கின்றனர் என்ற புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த புள்ளிவிவரம், தென் மாநிலங்களில் தமிழ்நாடு பள்ளி சேர்க்கையில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதையும் குறிப்பிடுகிறது. 

இந்த புள்ளி அறிக்கை தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தென் மாநிலங்களில் ஆறு முதல் பத்து வயது வரையிலான குழந்தைகளின் பள்ளி சேர்க்கையில், 97% உடன் கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் உள்ளன. தமிழ்நாடு ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 50% பேர் அரசு பள்ளிகளில் சேர்கின்றனர், 29.6% பேர் தனியார் பள்ளிகளில் சேர்கின்றனர், மற்றும் மீதமுள்ள 20.4% பேர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள்.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பார்த்தால் பள்ளி சேர்க்கையில் திரிபுரா மாநிலம் முதலில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu School Education Central Govt Report


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->