பொது மக்களை நேரடியாக சந்திக்க விஜய் திட்டம்!....வெளியானது முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் 27-ம் தேதி  நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த மாதம் 3-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விஜய் தனது 69-வது படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நிலையில், பின்னர்  மீண்டும் அரசியல் பணியில் சில நாட்கள் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழக கட்சி வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குறித்து, பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் விஜய் மாதம் தோறும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, பொது மக்களை நேரடியாக சந்திப்பதற்காக  தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கோவையில் அடுத்த மாதம் 27-ம் தேதி முதல் சுற்று பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது கட்சியின் கொள்கை குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூற உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay project to meet the public directly major announcement released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->