செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு..!
Judicial Custody For Senthil Balaji Will Be Extended till July 1
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகக் கூறி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப் பட்டார். தொடர்ந்து அவர் தாக்கல் செய்து வரும் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் ஆகிய இரண்டும் தள்ளுபடி செய்து வந்தன.
இந்நிலையில் சமீபத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து சென்னை புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியான அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப் பட்டார். இதையடுத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து உத்தரவிட்டு உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
அதன்படி வரும் ஜூலை 1ம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப் பட்டு உள்ளதாகத் தெரிகிறது. மேலும் அமலாக்கத் துறையினர் தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும் படி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அனைத்து புதிய மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூலை 1ம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளி வைத்துள்ளார்.
English Summary
Judicial Custody For Senthil Balaji Will Be Extended till July 1