தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் - திமுக கூட்டணி கட்சி தலைவர் சூளுரை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு மதுரையில் வருகின்ற 30 , 31 ஏப்ரல் 1ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்த் புரத்தில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நினைவு நாளை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கொடியேற்றினார். 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் பேசுகையில், "பாஜகவின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்டுகள் ஆகிய நமக்கு உள்ளது.

மதவாதத்தை தனி ஒருவரால் மட்டும் தடுத்துவிட முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக உள்ளிட்ட மதசார்பற்ற சக்திகளோடு இணைந்து பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

அதேநேரத்தில் தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் பொது மக்களின் பக்கம் நின்று அவர்களின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம்" என்று பாலகிருஷ்ணன் பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k balakirushnan say about tn bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->