தமிழில் படித்து, சிறப்பு வகுப்புகளுக்கே போகாமல் டி.எஸ்.பியான பெண்ணுக்கு கி.வீரமணி பாராட்டு.! - Seithipunal
Seithipunal


பவனியா என்ற பெண், தமிழில் படித்து எந்தவித சிறப்பு வகுப்புகளுக்கும் செல்லாமல், தானே வகுப்பறையில் படித்து முன்னேறி, முதல் முயற்சியிலேயே நேரடியாக டி.எஸ்.பி. ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர், " தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய குரூப்-1 தேர்வில், புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு செட்டியாப்பட்டியில் - எளிய குடும்பத்தைச் சார்ந்த பவனியா என்ற பெண், தமிழில் படித்து எந்தவித சிறப்பு வகுப்புகளுக்கும் செல்லாமல், தானே வகுப்பறையில் படித்து முன்னேறி, முதல் முயற்சியிலேயே நேரடியாக டி.எஸ்.பி. ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது, அதுதான் சனாதன தர்மம் என்று கல்விக்குத் தடை போட்ட ஒரு சமூகத்தில், இப்படி ஒரு அரிய சாதனை செய்து, அறிவுக் கூர்மையும், அதனை மூலதனமாக்கிய உத்தியோகமும் அடைய எம்மால் முடியும் என்று காட்டிய பவனியாவிற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். 

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்று காட்டிய பவனியாக்களைப் போல, பலரும் கிராமம், தமிழ் வழி படிப்பு எதுவும் உயருவதற்கு எங்களுக்குத் தடையில்லை என்று காட்டியவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றோம்."என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K Veeramani wishes To DSP bavaniya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->