"பகுத்தறிவு எங்கே போகுது.?" திருவாரூரில் கி.வீரமணியின் பேச்சிற்கு.. எழும் விமர்சனங்கள்.!
K veermani speech make fight On social media
திருவாரூர் மாவட்டத்தில் சனாதன எதிர்ப்பு மற்றும் திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய போது தி.க தலைவர் கி.வீரமணி, "சனாதனம் என்பது ஆரிய மாடல். இன்னாருக்கு இது மட்டும்தான் என்பது தான் சனாதனம், மனுதர்மம்.
திராவிட மாடல் என்பது அனைவருக்கும் பொதுவான சமத்துவம். பொருளாதார நீதி மற்றும் சமூக நீதிதான் திராவிட மாடல். அனைவருக்கும் நீதி ஒரே மாதிரியானது என்ற அரசியல் அமைப்பை அம்பேத்கர் கொண்டு வந்தார். அதை மாற்ற முயல்வது தான் சனாதனம்.
பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என்றும், அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாள் என்றும் திமுக அரசு அறிவித்துள்ளது. இதுதான் திராவிட மாடல் இந்த தத்துவத்தை பாதுகாப்பது தான் இந்திய அரசியலமைப்பு சட்டம். சனாதனத்திற்கு எதிராக இந்திய அரசியல் சட்டம் இருக்கிறது. சனாதன எதிர்ப்பு எத்தகையது என்றால் மனிதநேய ஆதரவு மற்றும் வளர்ச்சியை நோக்கி செல்லும் பாதை.
சுயமரியாதை, திராவிட மற்றும் பகுத்தறிவு தத்துவங்களை விஞ்ஞான தத்துவங்களாக பார்க்க வேண்டும்." என்று பேசினார். தொடர்ந்து பேசிய கீ.வீரமணி, "திருவாரூரில் ஓடாமல் இருந்த ஆழித் தேரை ஓட்டியவர் கருணாநிதி தான். எனவே தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்." என்று பேசியுள்ளார்.
பெரியாரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் திராவிட கட்சியின் தலைவர் பகுத்தறிவு என்றெல்லாம் பேசிவிட்டு, இறுதியில் தனி மனித பெருமையை பேசுவது போல கருணாநிதி பெயரை தெருவிற்கு வைக்க வேண்டும் என்று கூறி இருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
ஏனெனில் பெரியாரின் கொள்கைகள் தனிமனிதனை உயர்த்திப் பிடித்தல் என்பது மோசமான விஷயம் என்று கூறுகின்றன. ஆனால் திராவிட மாடல் என்ற பெயரில் பெரியாரின் கொள்கைகளையே மறந்து விட்டு திராவிட கழகம் செயல்படுகிறதா என்று கேள்வியை வீரமணியின் செயல்பாடு ஏற்படுத்தியுள்ளது.
English Summary
K veermani speech make fight On social media