விருதாச்சலத்தில் நாளை கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா! - Seithipunal
Seithipunal


கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் விருத்தாசலம் பூதாமூர் ஸ்ரீ சிவா ஏ/சி மஹாலில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படி கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, 

கழக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பேச்சு போட்டி 24.08.2024 நாளை சனிக் கிழமை காலை 8 மணியளவில் விருத்தாசலம் பூதாமூர் ஸ்ரீ சிவா ஏ/சி மஹாலில் நடைபெறுகிறது. 

இதில் நான் தலைமையேற்று நிகழ்ச்சியினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறேன். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ். கணேஷ் குமார் வரவேற்ப்புரையாற்றுகிறார். 

மாநில இளைஞரணி துணை செயலாளர் மண்டலம்-2 பொருப்பாளர் அப்துல்மாலிக் முன்னிலை வகிக்கிரார். இதில் நடுவர்களாக வழக்கறிஞர் தமிழன் பிரச்சனா, பத்மபிரியா, தக்கோலம் தேவபாலன், ஆகியோர் பங்கேற்கிறார்கள். அதுசமயம் கடலூர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக,செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய நகர இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalaignar Karunanidhi program in virudhachalam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->