கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இனி இதற்கும் சிகிச்சை பெற்று கொள்ளலாம் - அமைச்சர் பேட்டி..! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று கண் அறுவை சிகிச்சை தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

அப்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது,  

"பார்வைத் திறன் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிப்பது கவலை அளிக்கிறது. ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளித்தால், பெரும்பாலான பார்வை இழப்புகளைத் தடுக்க முடியும். 

இந்த ஆண்டு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இதுவரை 460 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வருகின்ற முகாம்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில், ஏழைகள் பயன்பெறும் வகையில் கண்புரை பரிசோதனையும் சேர்க்கப்படும். 

கண்புரை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு கண் மருத்துவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்". என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவர் அமர் அகர்வால் பேசுவையில் தெரிவித்துள்ளதாவது, “கண்புரை பாதிப்பில் சிக்கலான சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கு வெவ்வேறு வழிமுறைகளையும், அறுவை சிகிச்சை உத்திகளையும் அறிந்து கொள்வதற்கு இந்த கருத்தரங்கு உதவும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kalaingar kappitu thittam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->