அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல - மநீம தலைவர் கமல்ஹாசன்! - Seithipunal
Seithipunal


சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வட சென்னை, திருவொற்றியூர், பொன்னேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 5,000கும் மேற்பட்டோருக்கு தேவையான நிவாரண பொருட்களை இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அனுப்பி வைத்தார்.

பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "இதற்கு முன் வந்தது எல்லாம் சிற்றிடர், இது பேரிடர். கடந்த காலத்தை விட தற்போது அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசை குறை சொல்லிக் கொண்டு இருப்பதைவிட இறங்கி வேலை செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை.

நாங்கள் எப்போதும் அப்படி தான் செய்து கொண்டிருக்கிறோம். அரசை குறை கூறும் நேரம் இதுவல்ல அதை பிறகு செய்யலாம். இப்போது நாம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

மேலும் பேசிய அவர் இந்த பொறுப்பு எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும்தான். தற்போது வடசென்னை, பொன்னேரி, திருவெற்றியூர் பகுதிகளை சேர்ந்த 5,000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளோம்'' என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan said This is not time to criticize govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->