'பத்தல பத்தல' பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார்.!
KAMAL VIKRAM SONG ISSUE
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் விக்ரம் படத்தை தயாரிக்கிறார்.
விக்ரம் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வருகிற ஜூன் 3-ம் தேதி விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வருகிற மே 15-ந்தேதி அன்று விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, விகாரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள 'பத்தல பத்தல' என்று தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.
இந்நிலையில், பத்தல பத்தல பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை காவல் ஆணையரகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில், "கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்தில் வரும் 'பத்தல பத்தல' என்ற பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ள வரிகளை நீக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.