கமல்ஹாசனின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி.!
kamalhaasan wish republic day 2022
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், "இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம். நாம்தான் இதன் பாதுகாவலர்கள் என்பதை உணர்வோம். அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின், அதிகாரத்தின், உரிமைகளின் உண்மையான மதிப்பை அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்." என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
மேலும், 73-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (26.1.2022) காலை 8.30 மணியளவில் மாநிலச் செயலாளர்கள் .சிவ இளங்கோ, செந்தில் ஆறுமுகம், முரளி அப்பாஸ், ஸ்னேஹா மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலையில் மாநிலச் செயலாளர் சரத்பாபு ஏழுமலை அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில இணை மற்றும் துணைச் செயலாளர்கள், ஆழ்வார்பேட்டை பகுதிக்கான மாவட்டச் செயலாளர் ஓம் பிரகாஷ் மற்றும் இப்பகுதி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். தேசியக் கொடி ஏற்றியபின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
English Summary
kamalhaasan wish republic day 2022