கம்பில் இந்த இனிப்பு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? உடனே செய்யுங்கள்..!
Kambu Halwa Recipe
கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு. இதில் கொழுப்பும் குறைவாக உள்ளது. இந்த கம்பங்கூழை குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும். கம்பில் பல விதமான உணவுகள் செய்து சாப்பிடலாம். தற்போது சுவையான கம்பு அல்வா எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
கம்பு - 1 கப்
நெய் - தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
முந்திரி, திராட்சை - சிறிதளவு
ஏலக்காய் பொடி – சிறிதளவு
செய்முறை:
கம்பை ஊறவைத்து அரைத்து பாலை வடிகட்டி கொள்ள வேண்டும் வாணலியில் வடிகட்டி வைத்திருக்கும் பாலை ஊற்றி கைவிடாமல் கிளற கொள்ள வேண்டும். அதில் நாட்டு சக்கரையை சேர்த்து கிளறி கொள்ளவும்.
அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி கொள்ளவும். அது கெட்டியானதும் அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த திராட்சை, முந்திரியையும் கிளறவும். திரண்டு வரும் போது இறக்கினால் சுவையான கம்பு அல்வா தயார்.
இந்த அல்வாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். கம்பில் உள்ள நார்சத்துக்கள் உடலை பலப்படுத்தும்.