மக்களிடையே பொய் பரபரப்பு குழு... பா.ஜ.கவை சாடிய கனிமொழி.!
kanimozhi election campaign
கோவையில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
மேலும் துடியலூர் சந்தை கடை பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியிருத்தப்பாவது, பா.ஜ.கவினர் பொய்யான செய்திகளை பரப்புவதற்கே ஒரு குழு வைத்துள்ளனர். அந்த குழு மூலம் மக்களிடையே பொய்யான செய்திகளை பரப்பி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் உயிரோடு இருந்தாலே போதும் என்ற அளவிற்கு பா.ஜ.க ஆட்சி நிலைமை உள்ளது.
பெண்கள் மீதான கொடூரங்கள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பா.ஜ.கவை சேர்ந்த 44 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட பா.ஜ.க அதிக நிதி பெற்றுள்ளது. இதனால் பா.ஜ.க தேர்தல் பத்திரம் மூலம் ஊழல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே கிடையாது. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
English Summary
kanimozhi election campaign