கலைஞரின் உரையை படிங்க... இரண்டுக்கும் சம்பந்தமில்லை.. அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி..!! - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் வடசென்னையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார். இந்த விழாவில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இந்த விழாவில் கனிமொழியுடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது "வங்கித் தேர்வினை பொங்கல் தினத்தன்று நடத்தி பொதுமக்கள் பொங்கல் கொண்டாட முடியாத அளவிற்கு மத்திய அரசு செய்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் போன்று பல மாநிலங்களில் விவசாய திருவிழாக்கள் கொண்டாடக்கூடிய இந்நாளில் அத்தனை பேருடைய உணர்வுகளையும் மதிக்காமல் பொங்கல் தினத்தில் தேர்வு அறிவித்தது நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க கூடிய செயலாக மாறியுள்ளது.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருவள்ளூர் படத்தை காவி உடையுடன் பதிவிட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கனிமொழி "திருக்குறளை படித்தால் திருவள்ளுவருக்கும் காவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று புரிந்து கொள்வார்கள். அப்படி இல்லை என்றால் கலைஞரின் உரையில் தெளிவாக இருக்கிறது. அதைப் படித்து புரிந்து கொள்ளலாம்" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதிவுக்கு பதிலடி தந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi response to Annamalai who posted Tiruvalluvar photo with saffron colour


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->