தமிழகத்தில் கஞ்சா பயிர் இல்லை! வடமாநிலங்களிலிருந்து வருகிறது - அமைச்சர் ரகுபதி பேட்டி!
Kanja ADMK DMK EPS
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க. அரசு தமிழக உரிமைகளை அடகு வைத்துள்ளது" என குற்றம்சாட்டி இருந்த நிலையில், திமுக அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அ.தி.மு.க. அரசின் கடந்தகால செயல்பாடுகளை சாடியதோடு, தி.மு.க. அரசு தமிழக உரிமைகளை உறுதியாக பாதுகாக்கும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தினார்.
அமைச்சர் ரகுபதி பேட்டி: கஞ்சா தமிழகத்தில் பயிரிடப்படவில்லை. இது வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பயிரிடப்படுகிறது. மத்திய அரசு, தமிழகத்திற்குள் கஞ்சா வருவதை தடுக்க தோல்வியுற்றுவிட்டு, தமிழக அரசை குற்றம்சாட்டுவது ஒழுங்கற்றது.
எடப்பாடி பழனிசாமி, நான்கரை ஆண்டுகள் பாஜக அரசின் கீழ் அடிபணிந்து ஆட்சி நடத்தி, இப்போது மற்றவர்களை விமர்சிப்பது பரிதாபமானது.
தி.மு.க. அரசு, டெல்லிக்கு அடிபணியாது, எந்தவித அடமானமும் வைக்காது. எங்களுக்கு சொந்த புத்தியும், உறுதியான நிலையில் நிற்கும் சக்தியும், தமிழ்நாட்டை காப்பாற்றும் ஆற்றலும் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தயாராக இருந்தால், ஒரே மேடையில் விவாதிக்க வரலாம்; நானே நேரில் எதிர்க்கத் தயார்" என்று அமைச்சர் தெரிவித்தார்.