திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு! மொத்த குடும்பமும் சிக்கியது! வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  - Seithipunal
Seithipunal


திமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சி பெண் கவுன்சிலர் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரியாக பணியாற்றும் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய இரண்டாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த ராஜலட்சுமி. 

இவரின் கணவர் செங்கல்பட்டு மாவட்ட பொதுப்பணி நீர்வள துறையின் அலுவலக துணை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், ராஜலட்சுமி மற்றும் அவரின் கணவர், தாய், அக்கா உள்ளிட்ட நான்கு பேர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஒரு நிறுவனம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த நிறுவனம் மூலம் பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர்களின் சொத்து மதிப்பு பல்வேறு மடங்கு உயர்ந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanjipuram DMK councillor TamilNadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->