கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்.. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 36 தொகுதிகள் பட்டியலின வேட்பாளர்களுக்கும், 15 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 2613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி ராணி, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka assembly election campaign today end


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->