நாளை தேர்தல்.. கேஸ் சிலிண்டருக்கு பூஜை செய்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்! - Seithipunal
Seithipunal


224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

கர்நாடக மாநில தேர்தலையொட்டி கடந்த சில நாட்களாக ஆளும் கட்சி பாஜக, எதிர்க்கட்சி காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் மே 10ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் கேஸ் சிலிண்டரை வைத்து சிறப்பு பூஜை செய்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Congress leader TK Sivakumar pray Gas cylinder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->