#BigBreaking | கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டி - தொகுதி, வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது.

வரும் மே மாதம் 10 ஆம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

பெரும்பான்மை இல்லை என்றாலும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் வியூகத்தை வகுத்து மதசார்பற்ற ஜனதா தளமும் (ஜேடிஸ்) தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

இதில், கோலார் தங்கவயல், பெங்களூர் மாநகரம் மற்றும் புறநகர் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய 15 தொகுதிகளில் அதிமுகவின் ஆதரவை பாஜக தலைமை கோரியுள்ளது. 

ஆனால், 3 முதல் 5 தொகுதிகள் வரை அதிமுகவுக்கு வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது.

கர்நாடக மாநில அவைத் தலைவர் அன்பழகன் வேட்பாளராக அத்தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் சில தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Election ADMK Candidate


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->