கர்நாடகாவை இழக்கும் பாஜக! இனி அவ்வளவுதான் - ஜெயராம் ரமேஷ் ஆருடம்! - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவில் பாஜக ஆளக்கூடிய ஒரே மாநிலம் கர்நாடகா. இந்த தேர்தலோடு அதுவும் முடிவுக்கு வரப்போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தெரிவிக்கையில், "நான் வருகின்றார் 2024 தேர்தலை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சூப்பர் பூஸ்டராக அமையும்.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு நல்ல ஒரு பாசிட்டிவான வைப் இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகால பாஜகவின் ஆட்சியைப் பற்றி பாஜக செய்யும் பிரச்சாரத்தை மாநில மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை வர வாய்ப்பு இல்லை. எனக்கு அதில் உடன்பாடும் கிடையாது. நிச்சயமாக இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த தேர்தலின் முடிவு, இந்த வருடத்தில் இறுதியில் நடக்க உள்ள தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற பொதுத்தேர்தலில் எதிரொலிக்கும்.

அப்போது காங்கிரஸ் கட்சி மேலும் வலுப்பெறும். இந்த வருடத்தில் நடக்கக்கூடிய இந்த ஆறு மாநில பொதுத் தேர்தலின் முடிவுகள் நிச்சயமாக 2024 பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Election Congress


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->