#BigBreaking || ஹிஜாப் விவகாரம் - போராட்டம் - துப்பாக்கி சூடு., கர்நாடகாவில் பெரும் பதற்றம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின், தாவண்கரே மாவட்டத்தில், ஹிஜாப் அணிவது தொடர்பான போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு பள்ளி அனுமதிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில்,  கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தில், ஹிஜாப் மாநில அணிவது தொடர்பான போராட்டம் நடைபெற்றது. 

கலவரமாக மாறக்கூடிய நிலைக்கு சென்றதால், போராட்டக்காரர்களை களைந்து செல்வதற்காக வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு செய்துள்ளனர்.

தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பாக இரண்டு தரப்புக்கு இடையே கடுமையான மோதல் வெடிக்கத் தொடங்கியது. 

அப்போது பள்ளியின் முன்பு குவிந்த போராட்டக்காரர்கள், ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும் ஒரு தரப்பும், எதிராக ஒரு தரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka islam schol girl uniform issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->