அமைச்சர் சென்ற கார் மரத்தில் மோதி விபத்து! லேசான காயத்துடன் தப்பித்த அமைச்சர்!
karnataka minister car accident
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள லட்சுமி ஹெப்பால்கர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை, தனது சகோதரர் சன்னராஜ் ஹட்டிஹோலியுடன் பெலாகவி மாவட்டம் கிட்டூர் நெடுஞ்சாலை அருகே பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டது. சாலையில் திடீரென ஓடிய நாயை தவிர்க்க முயன்ற டிரைவர், காரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மரத்தில் மோதினார்.
விபத்தில், காரின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது. அமைச்சருக்கு முகம் மற்றும் இடுப்பில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தற்போது அவர் சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. காரில் இருந்தவர்கள் ஏர்பேக்குகள் திறக்கப்பட்டதால் பத்திரமாக இருந்தனர்.
பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்தது.
English Summary
karnataka minister car accident