கார்த்தி கோபிநாத் ஜாமினில் விடுதலை.!
karthi gopinath bail june
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிகளுக்கு, பல பேரிடம் சுமார் முப்பத்தி மூன்று லட்சம் ருபாய் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக, யூடியூபர் கார்த்திக் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று, யூடியூபர் கார்த்தி கோபிநாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இதேபோல், யூடியூபர் கார்த்தி கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி காவல் துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு மனுக்கள் மீதான விசாரணையும் வருகின்ற ஜூன் 13-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும் தனிப்பட்ட வங்கி கணக்கின் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று, கார்த்திக் கோபிநாத்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக 15 நாள் நீதிமன்றக் காவலில் இருந்த கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனுவை விசாரணை செய்த பூந்தமல்லி நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, இன்று சிறையில் இருந்து வெளியாகியுள்ளார்.
English Summary
karthi gopinath bail june