யார் சொல்லி..! யாரை காப்பாற்ற..! எதனை மறைக்க..! கரூர் சிறுமி விவகாரத்தில் வீடியோ வெளியிட்டு முன்னாள் அமைச்சர் கேள்வி!
Karur incident ADMK Ex Minister vijayabaskar statement
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நம் கரூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி மாணவி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக செய்தி வெளிவந்தது.
இந்த நிலையில், அதனை அவசர கதியில் மறுத்து, செயின் பறிப்பு என சினிமா திரைக்கதையையே மிஞ்சும் வகையில் ஒரு கதையை கூறி அவசர அறிக்கை வெளியிட்டது கரூர் மாவட்ட காவல் துறை,
ஆனால், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தன் மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளதாக கூறி அதற்கு நீதி கேட்டும்,காவல் துறையினர் பொய்யான புகாரில் கையெழுத்திட வற்புறுத்துவது குறித்தும் அவர்கள் அளித்த பேட்டியானது செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
யார் சொல்லி..!
யாரை காப்பாற்ற..!
எதனை மறைக்க..!
முயற்சித்து வருகிறது கரூர் மாவட்ட காவல் துறை..?
பாதுகாப்பில்லா தமிழகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Karur incident ADMK Ex Minister vijayabaskar statement