நான் பதவி விலகிக்கொள்கிறேன்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தனது பதவியிலிருந்து விலக உள்ளதாக தலைமைக்கு அறிவித்துள்ளார்.

அக்கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் எந்தவிதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது. அதன்படி, அடுத்த மாதம் 72 வயது ஆவதை ஒட்டி, தன்னை பொறுப்புகளில் இருந்து விடுவிக்க, கட்சியின் மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கூட்டணி கட்சியின் மீது தொடர் விமர்சனம்!

தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாதா அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? என்று, திமுக அரசை அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் இது தற்போது பெரும் போசு பொருளாகியுள்ளது.

மேலும், அரசு பள்ளிகளை தனியார் தத்து கொடுத்த விவகாரம், பெரியார் கொள்கையிலிருந்து திமுக விலகிவிட்டது என்று தொடர்ந்து திமுகவை கே.பாலகிருஷ்ணன் விமர்சித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாதா அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா என்ற கேள்விக்கு, திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கடுமையாக கண்டனம் தெரிவித்து இன்று காலை கட்டுரை வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கே பாலகிருஷ்ணனின் பதவி விலகும் கோரிக்கை அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KBalakrishnan CPIM dmk allince


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->