திகார் சிறையில் வைத்தே கைது செய்யப் பட்ட கெஜ்ரிவால்..! சிபிஐ நடவடிக்கை..!! - Seithipunal
Seithipunal


டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ம் தேதி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப் பட்டார். 

அப்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப் பட்ட கெஜ்ரிவால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இதையடுத்து பிரச்சாரம் முடிந்த பிறகு 21 நாட்களுக்குப் பிறகு, தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே மீண்டும் சிறைக்குச் சென்றார். 

இந்நிலையில் கெஜ்ரிவாலின் மீது கலால் கொள்கை முறைகேடு தொடர்பான  இன்னொரு வழக்கும் உள்ள நிலையில், அது சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கெஜ்ரிவாலிடம் கடந்த இரண்டு நாட்களாக திகார் சிறையில் வைத்தே விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திகார் சிறையிலேயே சிபிஐ அதிகாரிகளால் கெஜ்ரிவால் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியினர், கெஜ்ரிவால் ஜாமீனில் வெளி வந்து விடக் கூடாது என்பதாலேயே மத்திய அரசு அவசரமாக சிபிஐ மூலம் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kejriwal Arrested In Tihar Jail By CBI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->