படங்களில் நடிக்க வேண்டும் - அமைச்சர் பதவி வேண்டாம் - பாஜக எம். பி. சுரேஷ் கோபி அதிர்ச்சி முடிவு!
Kerala BJP MP Suresh Gobi Taken Shocking Decision
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. தற்போது மோடி 3.0 அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று மாலை பிரதமர் மோடியுடன் தொடர்ந்து அடுத்தடுத்து குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவியேற்றனர். இதையடுத்து இன்று மாலை முதல் அமைச்சரவைக் கூட்டம் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கேரள பாஜக வேட்பாளராக திருச்சூரில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வென்றுள்ள மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு இணை அமைச்சராக பதவி வழங்கப்பட்டது. இவரும் நேற்று பிரதமர் மோடியுடன் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுரேஷ் கோபி கேரள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நான் நிறைய படங்களில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளேன். அதையெல்லாம் நான் முடிக்க வேண்டும். எனவே எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று முன்பே கூறினேன்.
ஆனால் பாஜக தலைமை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டேன். எம். பி. யாக இருப்பதே எனக்கு போதும். விரைவில் நான் அமைச்சர் பதவியில் இருந்து விலகி விடுவேன். திருச்சூர் மக்களுக்கு என்னை தெரியும். அவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் வராது" என்று சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
அவரது இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
English Summary
Kerala BJP MP Suresh Gobi Taken Shocking Decision