கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை வழக்கில் 52 பேர் கைது!  - Seithipunal
Seithipunal


கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதான தடகள விளையாட்டு வீராங்கனையிடம், 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

13 வயது முதலே பலரால் வன்கொடுமை செய்யப்பட்ட தடகள வீராங்கனை, தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் மீண்டும் மீண்டும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

போலீசாரின் விசாரணையில், மாணவி குற்றம் சாட்டிய 62 பேருக்கும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பத்தினம்திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதன்பேரில், காதலன் உள்பட 20 பேரை உடனடியாக கைது செய்த போலீசார், மேலும் 32 பேரை தொடர்ந்து கைது செய்துள்ளனர். 

மலையாளப்புழாவைச் சேர்ந்த அபிஜித் என்பவரை சென்னையில் தனிப்படை போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது. 

வெளிநாட்டில் உள்ள இரண்டு குற்றவாளிகளை பிடிக்க லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையமும், சிறப்பு புலனாய்வு குழுவும் சம்பவத்தை விசாரணைக்கு எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala Pathanamthitta Athlete POCSO CASE 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->