நாடு முழுவதும் யுபிஐ சேவை பாதிப்பு - பயனர்கள் கடும் அவதி..!!
upi service down in india
நாடு முழுவதும் பெருநகரங்கள் முதல் சிறுகிராமங்கள் வரை யுபிஐ மூலம் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இந்தப் பணப்பரிவர்த்தனை கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று யுபிஐ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 11 மணி முதல் யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டு பயனாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த யுபிஐயை முடக்கம், உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது, மின்கட்டணம் செலுத்துவது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு யுபிஐயை நம்பியிருக்கும் ஏராளமான மக்களை வெகுவாக பாதித்தது.
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
English Summary
upi service down in india