வரும் 24 ஆம் தேதி தமிழகத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நீடித்த வளர்ச்சி இலக்கு குறித்து வரும் ஏப்ரல் 24-ம் தேதி  கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

வருகின்ற 24ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஒட்டி நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அன்றைய தினம் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும், உறுதிமொழி எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதற்கான விவரங்களை மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிராமசபை கூட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டத்தை, வருகின்ற 24ஆம் தேதி நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கவும், கூட்டம் நடைபெற்ற அறிக்கையினை தொடர்புடைய கிராம ஊராட்சிகள் இடம் இருந்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும் என்று, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kirama sabai kottam in 24 april 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->